Category / அம்மாவின் அருளுரை

ஒரு கிராம மக்கள் மிகுந்த ஒற்றுமையோடும் அமைதியோடும் வாழ்ந்து வந்தனர். அக்கிராமத்தினர் இவ்விதம் ஒற்றுமையாக வாழ்வதற்கு, அந்தக் கிராமத்தில் சிறந்த உதாரணமாக ஒரு குடும்பம் வாழ்ந்து வந்ததே இதற்குக் காரணமாகும். எந்த வீட்டிலாவது தம்பதியருக்கிடையே சண்டை ஏற்பட்டால், உடனே அவர்களில் ஒருவர், ” அந்த வீட்டிலுள்ள பெண்மணியைப் பார். எவ்வளவு ஒற்றுமையாகத் தனது கணவருடன் வாழ்கிறார்? ஏதாவது சண்டையோ சச்சரவோ அவர்கள் வீட்டில் எப்போதாவது கேட்டதுண்டா? அவர்கள் எவ்வளவு அன்புடன் வாழ்கிறார்கள்? அவரைப் போலப் பொறுமையாக இருக்க […]

நாடு முழுவதும் சொற்பொழிவுகளும் பேருரைகளும் நடக்கும் காலக்கட்டம் இது. ஆன்மிகப் பேருரை, கலாசார விரிவுரை, அரசியல் கூட்டம், சமயச் சொற்பொழிவு, நாத்திகச் சொற்பொழிவு- அதிகம் சொல்வானேன்?! ஒவ்வொருவரும் பேச ஏதாவது ஒரு விஷயம் உள்ளது. உலகில் எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் உரையாற்ற அதிகாரம் இருப்பதாகவே அனைவரும் எண்ணுகின்றனர். இதைச் சொல்லும் போது அம்மாவுக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ஒரு சிறுவன், ” எங்கள் ஆசிரியர் எவ்வளவு பெரிய மகான் என்று தெரியுமா? என்று […]

கேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அம்மா: பாரதத்தில் உள்ளவர்களே, ” இந்துக்கள் காட்டுமிராண்டிகள். அவர்களது பக்தியும் காட்டுமிராண்டித்தனமானது. குரங்கையும் யானைத்தலையுள்ள கணபதியையும் வழிபடுகிறார்கள் ” என்று சொல்கிறார்கள். ஆனால் இவற்றிற்குப் பின் உள்ள தத்துவத்தை, அறிவியல் உண்மையை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?. அதை அறிய எத்தனைபேர் முயன்றிருக்கிறார்கள்? அப்படியே அறியவேண்டும் விரும்பினாலும் அதை அறிவதற்குரிய வழி என்ன? இவை […]

கேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அம்மா: குழந்தைகளே, அம்மாவுக்கு பாரதம், அமெரிக்கா, ஐரோப்பா என்ற வேறுபாடுகள் எதுவுமில்லை. அங்குள்ளவர்களும் இங்குள்ளவர்களும் அம்மாவின் குழந்தைகளே. அதேசமயம் வெளிநாடுகளுக்கும் பாரதத்திற்கும் இடையில் கலாசார வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு நாட்டின் நிலவளமும் செல்வ நிலையும் மக்களின் மனவளர்ச்சியுமே அங்குள்ள குடிமக்களின் கலாசாரத்திற்கு வடிவம் கொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் வேறுபாடுகள் உண்டு என்றே கூறலாம். […]

கேள்வி: விக்கிரக வழிபாடு என்ற பெயரில் சிலர் இந்துமதத்தை நிந்திக்கிறார்களே! இதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? அம்மா: எந்த நோக்கத்துடன் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் விக்கிரக வழிபாடு எல்லா மதங்களிலும் இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தில் உண்டு ; இஸ்லாம் மதத்தில் உண்டு; புத்த மதத்தில் உண்டு; கிறிஸ்தவ மதத்தில் பாயாஸ நைவேத்தியமும், மலர் அர்ச்சனையும் இல்லை; அவ்வளவுதான். அதற்குப் பதிலாக மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள். ரொட்டியைக் கிறிஸ்துவின் உடலாகவும், திராட்சை மதுவை […]

காடுகள் மற்றும் உயிரினங்களின் அவசியம் கட்டுரையின் தொடர்ச்சி……. கேள்வி: தனது பிரச்னைகளுக்குத் தானே பரிகாரம் தேடுவதற்குப் பதிலாக, மனிதன் ஆன்மிகத் தலைவர்களையோ அல்லது மகான்களையோ நாடுவது அவர்களுக்குத் தொல்லை தருவதாக இருக்குமா? அம்மா: நாம் வளர்த்த ஒரு செடி கருகிப் போனால் நாம் அழுவோம். ஆனால், அதை நினைத்து அழாமல், மற்றொரு செடியை நட்டு வளர்க்க வேண்டும். சிரத்தையுடன், அதே சமயம் பற்றின்றிக் கர்மம் செய்யுமாறே ஆன்மிகத் தலைவர்கள் கூறுகின்றனர். நடந்ததை நினைத்து மனிதன் சோர்ந்து விடக்கூடாது. […]

ஆன்மிக சாதனைகளும்…. கட்டுரையின் தொடர்ச்சி…. கேள்வி:சில உயிரினங்களின் வம்சம் அழிந்து வருவதைத் தடுக்கச் சமுதாய அளவில் நாம் செய்யக் கூடியது என்ன? அம்மா: இதற்கு ஒரு நியதியைக் கொண்டு வருவது நல்லது. ஆனால், அதைச் சரியான முறையில் பிறரைப் பின்பற்றவும், பின்பற்றச் செய்யவும் தொண்டர்கள் அவசியம். இன்று ஒரு நியதியை ஏற்படுத்தும் ஆளே அதை மீறுகிறான். அதனால், புதிய ஒரு நல்ல பண்பாட்டை வளர்ந்துவரும் இளந்தலைமுறைக்குக் கற்பிப்பதே நிலையான தீர்வாகும். ஆன்மிகக் கல்வியின் மூலமே இது சாத்தியமாகும். […]

ஐவகை யக்ஞங்களும் அவற்றின் தத்துவமும் கட்டுரையின் தொடர்ச்சி ….. கேள்வி: ஆன்மிக சாதனைகளுக்கும், இயற்கைப் பாதுகாப்பிற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் என்னென்ன? அம்மா: “ஈசாவாஸ்யமிதம் ஸர்வம்“. அனைத்திலும் ஈசனின் சைதன்யமே நிறைந்துள்ளது என்றே நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே, நம்மைப் பொறுத்தவரை, இயற்கைப் பாதுகாப்பு என்பது இறை ஆராதனையே ஆகும். பாம்பைக்கூட வணங்கும் பண்பாடே நம்மிடம் உள்ளது. அனைத்திலும் இறைவனைக் கண்டு, அனைத்தையும் இறைவனாக வணங்கும்படியே மதம் கூறுகிறது. இந்த உணர்வு இயற்கைமீது அன்பு செலுத்த நமக்குக் கற்பிக்கிறது. […]