சுனாமி
2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி கேரளம்,தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஸ்ரீலங்கா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களை சுனாமி தாக்கிய பின்னர் அம்மா 200 கோடி ரூபாய் செலவில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6200 வீடுகள், 2500 பேருக்குத் தொழிற்கல்வி, 700 மீன்பிடி படகுகள், இன்ஜின்கள், மீன்பிடிவலைகள், கிராமப்பெண்கள் 600 பேருக்கு இலவசத் தையல் பயிற்சி மற்றும் இலவசத் தையல் இயந்திரங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

tsunami hitting the shores of kerala

அமிர்த குடீரம் ( வீடு வழங்கும் திட்டம் )
1996ம் வருடம் துவங்கிய ஏழைகளுக்கு 25,000 இலவச வீடுகளைக் கட்டி வழங்கும் திட்டத்தின்படி மாதா அமிர்தானந்தமயி மடம் நாடு முழுவதும் 25,000 வீடுகளைக் கட்டி வழங்கியது. இதை அடுத்து 2003ல் துவங்கப்பட்ட 1,00,000 இலவச வீடுகளைக் கட்டி வழங்கும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் கேரளம், தமிழ்நாடு , பாண்டிச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா, தில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயனடைந்து வருகின்றன.

பூனா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் சேரிப்பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

அமிர்த நிதி ( உதவித்தொகை )
1998-ம் வருடம் முதல் பாரதத்திலுள்ள ஏழை விதவைகள், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்றோர்களுக்கு  ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கும் திட்டமே “அமிர்த நிதி” ஆகும். இந்த உதவி 50,000 பேருக்கு வழங்கப்படுகிறது.

vidyamritam scholarship

வித்யாமிர்தம் ( கல்வி உதவித்தொகை)
2008-ல் தொடங்கிய ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமே வித்யாமிர்தம் ஆகும். இதனால்  மகாராஷ்டிரம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார்,  30,000 பேர் பயனடைந்து வருகின்றனர். இவர்களுள் வறுமைக் கொடுமையால் தற்கொலை செய்து மாண்ட விவசாயிகளின் குழந்தைகளும் அடங்குவர். இதை 1 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது.

அமிர்த நிகேதன்
பாரிப்பள்ளியில் இயங்கிவரும் அமிர்த நிகேதன் என்னும் அனாதை இல்லம் 400 குழந்தைகளுக்கு இலவச தங்கும் வசதி, உணவு, உடை, கல்வி, தொழில் பயிற்சி ஆகியவற்றை அளிக்கிறது. இவர்களுள் தமிழ்நாட்டினரும் ஹரிஜனங்களும் மலைவாழ் மக்களும் அடங்குவர்.


அமிர்தா அன்பு இல்லம் – சிவகாசி

இது ஆதரவற்ற முதியவர்களுக்கான இல்லமாகும். வசிப்பதற்கு வசதியான அறைகளும் பிரார்த்தனை மண்டபமும், அழகிய பூந்தோட்டமும் இக்கருணை இல்லத்தின் சிறப்புகளாகும். தற்போது இங்கு ஒரு மருத்துவ நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.

அமிர்தாரண்ய ஜீவனம் திட்டம்
துன்பத்தில் உழலும் மலைவாழ் மக்களின் நலனுக்காக மடம் ஆரம்பித்திருக்கும் திட்டமே அமிர்தாரண்ய  ஜீவனம். மலைவாழ் மக்களின் கல்வி, மருத்துவ வசதி, தொழில் பயிற்சி,சமூக உணர்வை வளர்த்தல்  போன்றவை இதன் லட்சியமாகும்.

அமிர்த ஸ்ரீ (Amrita Self-Reliance, Education & Employment )
கேரளத்தில்  கடலை மட்டும் நம்பி வாழும் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் அம்மாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மடம் தொடங்கிய முதல் சுய உதவிக்குழுத் திட்டமே அமிர்த ஸ்ரீ எனும் திட்டமாக உருவெடுத்தது.

இதன் மூலம் ஏழைப் பெண்களுக்குத் தையல் பயிற்சி,  கைவினைப் பொருட்கள் செய்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல்,கயிறு திரித்தல்,ரொட்டி தயாரித்தல்,கைத்தறித் தொழில்,தோல் பொருட்கள் தயாரித்தல்,காகிதப்பொருட்கள் செய்தல்,கூட்டு விவசாயம் போன்ற பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் சுயதேவையைப் பூர்த்தி செய்து வளமுடன் வாழ வழி வகுக்கிறது. மேலும் மடம் அவர்களுக்கு வங்கிகளில் கடனுதவி பெறவும் வழிகாட்டுகிறது.

தற்போதைய நிலவரப்படி கேரளா,ஆந்திரா,கர்நாடகா,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன.

அமிர்த கிருபா நீதி பிரதிஷ்டான்   ( இலவசச் சட்ட உதவி )
“அமிர்த கிருபா நீதி பிரதிஷ்டான்” என்பது அம்மாவின் ஆசிரமக் கிளைகளின் மூலமாகச் செயல்படும் அமைப்பாகும். இது ஏழைகளுக்கு இலவசச் சட்ட ஆலோசனைகளை வழங்கவும், சட்ட உரிமைகளைப் பற்றிய பயிற்சியை அளிக்கவும் வாதி,பிரதிவாதிகளுக்கு இடையே சுமூகமான தீர்வைக் காணவும் உதவும்  1008 வழக்கறிஞர்களைக் கொண்டதாகும்.

மக்கள் கல்வி இயக்கம்    ( ஜே. எஸ். எஸ் )
(மத்திய அரசின் நிதி உதவி பெற்றதாகும்)
இது ஒரு வேலை வாய்ப்புப் பயிற்சித் திட்டமாகும். இது கேரளத்தின் இடுக்கி, வயநாடு மாவட்டங்களிலும், தமிழ்நாட்டில் சிவகாசியிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. சிவகாசி பிரிவு என்.எல்.எம். – யுனெஸ்கோ (2008-ம் ஆண்டிற்கான ) விருதைப் பெற்றது. இந்த விருதை மேதகு பாரதக் குடியரசுத் தலைவி திருமதி. பிரதிபாபாட்டீல் அவர்கள் வழங்கினார்.

அமிர்தா யுவதர்மதாரா  (AYUDH)
சமூகநலச் சேவைகளுக்காக மடத்தால் உருவாக்கப்பட்ட உலகம் தழுவிய இளைஞர் இயக்கமே அமிர்தா யுவதர்மதாரா ஆகும். 16 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எவரும் இதில் உறுப்பினராகலாம்.

பசுமை நண்பர்கள் ( Green Friends )
இயற்கைக்கும் மனித குலத்திற்கும் இடையே உள்ள ஒருமைப்பாட்டை நம்மிடையே மீண்டும் விழித்தெழச் செய்யவும், இயற்கைத்தாயின் மீது அன்பையும், மரியாதையையும் தோற்றுவிக்கவும் இந்த இயக்கம் உதவுகிறது. இந்த அமைப்பு உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும்  பல இடங்களிலுமாக இதுவரை சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறது