மாத்ருவாணி என்பது அம்மாவின் உபதேசங்களைத் தரும் ஒரு சிறந்த மாத இதழாகும். அது மட்டுமல்ல; இது மாதா அமிர்தானந்தமயி மடத்தின் குரலும் கூட. முதன் முதலில் மாத்ருவாணி மலையாள மொழியில் 1984 -ல் அம்மாவின் பிறந்த நாளன்று “அமிர்தவாணி” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 1985-ல் தான் அது மாத்ருவாணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ் மாத்ருவாணியின் முதல் பிரதி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ல் சித்திரை வருடப்பிறப்பன்று மதுரையில் அம்மாவின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. பல இந்திய மொழிகள் (மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி,ஒடியா மற்றும் பெங்காலி ) மற்றும் வெளிநாட்டு மொழிகள் உட்பட 15 மொழிகளில் மாத்ருவாணி வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை மாத்ருவாணி சென்றடைகிறது.

அம்மாவின் உபதேசங்களே மாத்ருவாணியின் முக்கியமான அங்கமாகும். இது அம்மாவின் அருளுரை என்னும் தலைப்பில் வெளிவருகிறது. அம்மாவின் திருவாயில் இருந்து நமது ஸநாதன தர்மமும் ரிஷிகளும் கூறும் தத்துவங்களே எளிய மொழியில் வெளிவருகின்றன. அம்மாவின் துறவிச்சீடர்கள், இல்லறச் சீடர்கள், பக்தர்களின் அனுபவக் கட்டுரைகள் மற்றும் அறிஞர்கள் மற்றும் சான்றோர்களின் ஆன்மிகக் கட்டுரைகள் முதலியன மாத்ருவாணியில் வெளிவருகின்றன. மேலும், “ஒளியை நோக்கி”, “உத்தமத் தத்துவங்கள்” மற்றும் அம்மா ஐ. நா. சபை உள்பட பல சர்வதேச அமைப்புகளின் ஆன்மிக மாநாடுகளில் ஆற்றிய சிறப்புரைகள் எல்லாம் மாத்ருவாணியில் தான் முதலில் வெளியிடப்பட்டன. அதன் பின்னர்தான் அவை புத்தகங்களாக வெளிவந்தன.

மலையாள மாத்ருவாணி வெளியிடப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி 2008 ஆம் ஆண்டு “மாத்ருவாணி வெள்ளிவிழா” அம்மாவின் பிறந்த நாளில் கொண்டாடப்பட்டது. அதன் நினைவாக 25 புத்தகங்கள் ( மாத்ருவாணியின் தொடக்கம் முதல் அதில் வெளிவந்த பல்வேறு கட்டுரைகள் அடங்கியவை ) வெளியிடப்பட்டன.

ஒவ்வோர் ஆண்டும் அம்மாவின் பிறந்தநாளன்று மாத்ருவாணி பிரச்சாரகர்களுக்கு அம்மாவின் திருக்கரங்களால் நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது. மாத்ருவாணி சந்தா பற்றிய விவரம்:
1 வருடம் – ரூ.50/
3 வருடங்கள் – ரூ.125/
5 வருடங்கள் – ரூ.200/
ஆயுள் சந்தா – ரூ.500.

மாத்ருவாணிக்குச் சந்தா செலுத்த விரும்புபவர்கள் மணிஆர்டர் அல்லது வங்கி வரைவோலையை ” மாத்ருவாணி” எனும் பெயரில் எடுத்து
மாத்ருவாணி, அமிர்தபுரி (அஞ்சல்), கொல்லம் -690525 ,கேரளா
எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

தமிழ் இணைய தளத்தில் உங்களுக்கு மாத்ருவாணி படிக்க விருப்பமா? செல்லுங்கள் — www.matruvani.org

மேலும் மாத்ருவாணி மாத இதழ் சம்பந்தமான விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு 0476-3241067 என்ற தொலைபேசி எண்ணுடன் (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ) தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
e-mail: matruvani (at) amritapuri.org.