Category / செய்தி

அம்மாவின் செய்தி குழந்தைகளே, நமது பாரத தேசத்தின் கலாசாரத்தின் சின்னமாய் இருப்பது சம்ஸ்கிருத மொழி. மிகத் தொன்மையான நமது பாரதீய கலாசாரத்தின் வாகனமாக விளங்குவது சம்ஸ்கிருத மொழி.  மனித மனத்தில் ஓர் மாற்றத்தை உருவாக்கக் கூடிய ஓர் தனிப்பட்ட சக்தி சம்ஸ்கிருத மொழிக்கும் அதன் ஒலி அதிர்வுகளுக்கும் உண்டு. பாரதத்தில் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எத்தனையோ மொழிகளுக்கு மாதாவாக இருப்பது சம்ஸ்கிருதம். எல்லா பாரத மக்களின் பல்வேறு கலாசாரங்களையும் ஒன்றாய்க் கூட்டி  இணைப்பது சம்ஸ்கிருத மொழியாகும். சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ள […]

கொரானா வைரஸின் தாக்கத்தினால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பல நாட்களாக நாமெல்லாம் நம் வீடுகளுக்குள்ளோ அடுக்ககங்களுக்குள்ளோ அடைபட்டு இருக்கிறோம். உங்களில் பெரும்பான்மையான பேர்களுக்கு இது வெறுத்துப் போயிருக்கும்; துன்பமாயும் கூட இருக்கும். செய்யவேண்டிய காரியங்களுக்காகப் போட்ட திட்டங்கள் எல்லாம் முடங்கிப் போயிருக்கும். ஆனாலும் என் குழந்தைகள் முடிந்தவரை மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருக்க முயலவேண்டும். வைரஸின் பாதிப்பு இந்த அளவிலாவது கட்டுக் கோப்பில் இருக்கிறது என்றால் அதற்கு நீங்களெல்லாம் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்ததே காரணம். இப்போது நமது சிரத்தை […]

கோவிட்-19 நோயைக் கட்டுப் படுத்தி, அதன் தாக்கத்தை முறியடிக்கும் முயற்சிகளில் பங்கேற்கும் விதமாகவும், இந்நோயால் உடல், மனம், பொருளாதாரம் இவை பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் வகையிலும் மாதா அமிர்தானந்தமயி மடம் ரூ 13 கோடியை (1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நன்கொடை அளிப்பதாக இன்று அறிவித்துள்ளது. இதில் ரூ. 10 கோடி, பாரதப் பிரதமரின் பி எம் – கேர்ஸ் (PM-CARES) நிதிக்காக்கவும் ரூ. 3 கோடி கேரள அரசின் முதல்வர் அவசரநிலை நிதிக்காகவும் வழங்கப்படுகிற்து. […]

இவ்வருடம் (2018) மே மாதத்தில், எர்ணாகுளத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்களின் குழுவானது, ஜார்கண்டில் சேர்ந்த 19 வயது உள்ள அமர் சமத் என்ற ஆதிவாசி பையனின் தாடைப் பகுதியில் வளர்ந்திருந்த சுமார் ஐந்து கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். 14 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அமர், “எனது முகம் விகாரமாக இருந்த காரணத்தால், யாரும் […]

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக அம்மா தெரிவித்துள்ளார். இத்தொகையை ஆஸ்ரம தொண்டர்கள் உயிர் நீத்த வீரர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று கொடுப்பார்கள்.

கேள்வி: அம்மா அத்வைதம்தான்  உண்மையெனில் பாவதரிசனத்தின்தேவையென்ன? அம்மா: அத்வைதம்   பேசும் வேதாந்திகளில்  யாரும் ஆடை அணியாமல் நடப்பதில்லையே? அவர்களும் உடை அணிகிறார்கள், உண்கிறார்கள, உறங்குகிறார்கள், அவை உடல் வாழ்க்கைக்குத் தேவை என்பது அவர்களுக்குத் தெரியும். சமூகத்தின் இயல்புக்கு ஏற்ப உடை அணிகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப மகான்கள் வருகிறார்கள். ஸ்ரீராமர் வந்தார்:. ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார் ஸ்ரீராமரை போல் ஸ்ரீகிருஷ்ணர் இருக்க வேண்டும் என்று சொல்வதில் பொருளில்லை. மருத்துவரிடம் பலவித நோயாளிகள் வருவார்கள் எல்லாருக்கும் ஒரே மருந்தை […]

செப்டம்பர் 26-ஆம் நாள் நிகழ்ச்சிகளில் அடுத்து முக்கியமாக, அம்மாவின் பல்கலைக் கழகத்தோடு இணைந்தும், தனியாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலிருந்து சாதாரண மக்களின் நலம் கருதி உருவாக்கப்பட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் முக்கியமான சில பின்வருமாறு: 1)மீநுண் (நானோ) தொழில்நுட்பத்தில் இயங்கும் மின் சேமிப்போடு இணைந்த சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்: தற்போது உபயோகத்தில் உள்ள சூரிய ஒளி மின் உற்பத்திக் கலங்களில் உள்ள ஒரு பெரும் குறைபாடு, […]

விழாவின் முக்கிய பகுதியாக அமிர்தானந்தமயி மடம் இப்பிறந்தநாளை ஒட்டித் தொடங்குகின்ற மாபெரும் தேச நலப் பணியான “101 கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டம்” பற்றிய விவரங்கள் அறிவிக்கப் பட்டன. ‘அமிர்தா சுய சார்புக் கிராமங்கள்’ Amrita Self Relient Villages – Amrita seRVe என்ற பெயரில் இயங்கப் போகும் இந்த திட்டத்தின் கீழ், அனைத்திந்திய அளவில் 101 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்கள் எல்லா விதங்களிலும் சுயச் சார்புடன் செயல்படும் விதத்தில் வேண்டிய எல்லா கட்டமைப்பு வசதிகளும் அமிர்தானந்தமயி […]