19 பிப்ரவரி 2019

கடந்த 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக அம்மா தெரிவித்துள்ளார். இத்தொகையை ஆஸ்ரம தொண்டர்கள் உயிர் நீத்த வீரர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று கொடுப்பார்கள்.

அம்மா கூறினார் “நாட்டைக் காக்க வேண்டும் என்ற தங்களது தர்மத்திற்காக உயிர் நீத்த அந்த வீரர்களின் குடும்பங்களை ஆதரிப்பது என்பது நமது தர்மமாகும். மரணமடைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு அம்மாவின் இதயபூர்வ ஆதரவைத் தெரிவிக்கிறேன். அவர்களது நல்வாழ்விற்கும் மன சமாதானத்திற்கும் நாம் அனைவ்ரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.”

அம்மா 2019-ஆம் ஆண்டுக்கான பாரத சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக பாரத பயணத்தினிடையே மைசூர் செல்லும் வழியில் இதை அறிவித்தார்.