Category / செய்தி

செப்டம்பர் 22 – 25 சண்டிகா மஹா யாகம் அம்மாவின் 60ஆவது திருஅவதார தின வைபவத்தின் ஒரு அங்கமாக, ஸ்ரீ சண்டிகா மகா யாகம் அமிர்தபுரி ஆசிரமத்தில் மிகச் சிறப்பாக 4 நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. கொல்லூர் மூகாம்பிகை, மைசூர் சாமுண்டேஸ்வரி கோவில் அர்ச்சகர்களாகவும் வேத விற்பன்னர்களாகவும் உள்ள அனுபவமிக்க ரித்விக்குகளால் இந்த மஹா யாகம் பாரம்பரியச் சிறப்புடன் நடத்தப்பெற்றது. செப்டெம்பர் 22 ஆம் தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது இந்த யக்ஞம். சுமார் […]

ஓம் அமிர்தேஸ்வர்யை நம: அன்புடையீர், அம்மா – நமது தாய், குரு என்பதற்கு மேலாக லட்சக்கணக்கான மக்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மனிதகுலத்திற்கு சேவை செய்வதுடன் ஞானம் பகர்ந்தும் வலிமையையும் அளித்து மிகச்சிறந்த தூண்டுகோலாக அம்மா விளங்குகிறார். அம்மாவின் வாழ்வு எப்போதும் நமக்கு நிலையான அன்பு, அமைதி, கருணை, தன்னலமின்மை போன்ற அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே நமக்கு நினைவூட்டுகிறது. அம்மாவின் அன்பின் மூலம் வெளிப்படும் அரிய செயல்கள், மன வலிமை, […]

அம்மாவின் 58 வது பிறந்த நாள் விழா காலை 5 மணி அளவில் சூர்ய காலடி ஜெயசூர்யன் பட்டத்திரிபாடு அவர்கள் நடத்திய மஹா கணபதி ஹோமத்துடன் மங்களகரமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதற்கு பின்னர் சுவாமி துரியாமிர்தானந்த புரி அவர்கள் விழாவை காலை 7-30 மணி அளவில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி அமிர்தசொரூபானந்தபுரி அவர்களின் […]

டோக்கியோ ஜூலை 25, 2011 டோக்கியோ நகரில் அம்மாவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது அந்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட  பலர் ஆறுதலையும் அறிவுரையையும் நாடி அம்மாவிடம் வந்திருந்தனர். தாங்கள் அனுபவித்த துயரத்தை அம்மாவிடம் கூறிய போது துக்கம் தாளாமல் வாய்விட்டு அழுதனர். அம்மா அவர்களை அணைத்து ஆறுதல் கூறினார். இவர்களது வேதனையையும்  துயரையும் கவனித்த அம்மா பாதிக்கப்பட்ட பகுதியையும் ஏதாவது ஒரு நிவாரண முகாமையும் பார்வையிடத் தீர்மானித்தார். டோக்கியோ நிகழ்ச்சி அதிகாலை 5மணிக்கு நிறைவுற்றது. அதற்குப் பிறகு அம்மா […]

டோக்கியோ, ஜப்பான், ஜூலை 23 இந்த ஆண்டு மார்ச் 11ல் ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியில் பாதிக்கப் பட்டோருக்கு நிவாரண நிதியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை அம்மா அறிவித்தார். குறிப்பாக சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுக்காக இது அளிக்கப்பட்டது. “அகிலத்தை அரவணைக்கும் அம்மா ” (Embracing the World ) என உலகெங்கும் அறியப்படும் அமெரிக்காவில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தின் அகில உலக அறக்கட்டளை மூலமாக எனும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. […]

புதிய குழந்தைகள் காப்பகத் திறப்பு விழா ஏப்ரல் 5, கென்யா கென்யாவில் புதிய குழந்தைகள் காப்பகம் 5-4-2011-ல் திறந்து வைக்கப் பட்டது. கென்யக் குடியரசின் துணைக் குடியரசுத்தலைவர் மேன்மைமிகு கலோஜோ மிஸியோக்கா மேற்கூறிய காப்பகத்தை அம்மாவின் முன்னிலையில் 5-4-2011-ம் நாளன்று திறந்து வைத்தார். இதைக் கென்யாவின் மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை கட்டியுள்ளது. இதையொட்டி ஆதிநதி (Adhi river) என்னுமிடத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அந்நாட்டின் விளையாட்டு மற்றும் கலாசாரத் துறையின் இணையமைச்சர் திருமதி. வவின்ய நிதேதி, பாராளுமன்றத்தின் […]

காலை 5 மணி அளவில் சூர்ய காலடி ஜெயசூர்யன் பட்டத்திரிபாடு அவர்கள் நடத்திய மஹா கணபதி ஹோமத்துடன் அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா மங்களகரமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அதற்குப் பின்னர் சுவாமி துரியாமிர்தானந்த புரி அவர்கள் விழாவை காலை 7-30 மணி அளவில் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி அமிர்தசொரூபானந்தபுரி அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு […]

அமிர்தபுரி,செப்டம்பர் 22, மாநில அரசுகள் மற்றும் பிறதொண்டு நிறுவனங்களின் உதவியும் ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்குமானால் பாரதத்தில் உள்ள எல்லா பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் தூய்மைப் படுத்தும் பொறுப்பை நமது மடம் ஏற்கத் தயாராக இருப்பதாக அம்மா கூறினார். “பாரதம் வளரும் நாடாகும்.அதன் வளர்ச்சி பல்வேறு துறைகளிலும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது ” என்று கூறுகின்றனர். “ஆனால் சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களில் நாம் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம். நமது நாட்டில் […]