“நமது வாழ்வில் பெற வேண்டிய கல்வி இருவகைப்படும். அவற்றில் ஒன்று நாம் வாழ்வாதாரத்துக்கான கல்வி, மற்றொன்று வாழும் முறையைப் புகட்டும் கல்வி. இவ்விரண்டு கல்வியையும் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டியது மிக அவசியமாகும்” — அம்மா

2003ல் இந்திய அரசு அமிர்த விஸ்வ வித்யாபீடத்திற்குப் பல்கலைக்கழகத் தகுதியை வழங்கியது. இப்பல்கலைக்கழகம் பல்துறைப் படிப்புகளையும் பல்வேறு துறைகளிலும் ஆராய்ச்சிகளையும் கொண்டதாகக் கோவை, அமிர்தபுரி,கொச்சி,மைசூர்,பெங்களூரு ஆகிய ஐந்து கல்வி வளாகங்களை உடையதாக இருக்கிறது. இப்பல்கலைக்கழகத்தின் மொத்த நிலப் பரப்பு சுமார் 800 ஏக்கர் ஆகும். அதில் கட்டடம் மட்டும் சுமார் 8 மில்லியன் சதுர அடியில் அமைந்துள்ளது. இந்த 5 வளாகங்களும் இந்திய விண்வெளிக் கழக ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) செயற்கைக் கோளால் இணைக்கப்பட்டவையாகும். மேலும் இவை
பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), பாதுகாப்பு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (DRDO) போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. இப்பல்கலைக்கழகம் மத்திய அரசின் கல்வித் தர மதிப்பீட்டுக் குழுவால் (NAAC) முதல் தரச் (A- Grade ) சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனமாகும்.

மேலும் இது 2005 ஆம் ஆண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைச் (Indo-US Inter-University Collaborative Initiative in Higher Education ) செயல்படுத்தி வருகிறது. இது அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகம், ஹார்வர்டு பல்கலைக் கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் மற்றும் ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் உட்பட உலகில் 25 பல்கலைக் கழகங்களுடன் இணைந்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கல்விக்கான செயற்கைக்கோளின் (Edusat ) மூலமாக மேற்கூறிய பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு கொண்டு படிக்க இயலும். அமிர்தா பல்கலைக்கழகமும் நியூயார்க் மாகாணப் பல்கலைக்கழகமும் ( State University of New York, Buffalo ) இணைந்து சைபர் பாதுகாப்புத் துறையில்(Cyber security) நடத்திய பணிப் பட்டறையைக் (workshop ) கண்டு மத்திய அரசு நமது பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளது.

அமிர்தா பொறியியல் கல்லூரி (Amrita School of Engineering) எட்டிமடை- கோயம்புத்தூர்

கோவையில் முதன்முதலாக அமிர்தா பொறியியல் கல்லூரி 120 மாணவர்களையும் 13 கல்லூரி விரிவுரையாளர்களையும் கொண்டு 1994 ல் எட்டிமடை எனும் கிராமத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று அது 15,000 மாணவர்களையும் 1500 விரிவுரையாளர்களையும்(Faculties& Lecturers) கொண்ட ஒரு பெரிய கல்வி நிறுவனமாக ( பல்கலைக்கழகமாக ) விளங்குகிறது. இதில் Ph.D ஐ கல்வித் தகுதியாகக் கொண்ட 220 விரிவுரையாளர்களும் அடங்குவர். இங்கு சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்,கெமிக்கல், கணிப்பொறியியல், மற்றும் வானவெளியியல் (Aero space ) போன்ற துறைகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகளும் முதுகலைப் பட்டப் படிப்புகளும் பயிற்றுவிக்கப் படுகின்றன. இந்தியாவில் உள்ள உயர்தரக் கல்வி அளிக்கும் சிறந்த தனியார் கல்வி நிறுவனங்களில் 1;8 ஆசிரியர் – மாணவர் விகிதம் கொண்ட தனியார் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு மிகப்பெரிய நூலகமும் மிகச்சிறந்த ஆய்வகமும் செயல்பட்டு வருகிறது.

அமிர்தா வணிகவியல் கல்லூரி (School of Business) எட்டிமடை

இக்கல்லூரியில் பாரதீய ஆன்மிக கலாசாரம் மற்றும் நவீன வணிகவியல் கருத்துக்களின் சங்கமம் நிகழ்கிறது. இரண்டு வருட முழுநேர முதுகலைப் பட்டப் படிப்பு இங்குள்ள தனிச்சிறப்பாகும்.
மேலும் இங்கு தகவல் தொடர்புத் துறையும் (Dept. of Communication ) சமூகவியல் பணித் துறையும் (Dept. of Social Work ) சிறப்பாகச் செயல்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.amrita.edu. ஐத் தொடர்பு கொள்ளவும்.

அமிர்தா மருத்துவக் கல்லூரி (Amrita School of Medicine) கொச்சி
,

இங்கு மருத்துவத்தில் இளங்கலைப் படிப்புகளும் (MBBS, B.sc.MRT, B.sc. Respiratory therapy, B.sc. Optometry ) மற்றும் அறுவைச்சிகிச்சை உட்பிரிவில் முதுகலைப் படிப்புகளும் உள்ளன. முதுகலையில் நானோ டெக்னாலஜி, மூலக்கூறு மருத்துவம் (Molecular medicine ) முதலியவை உள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
இதில் நம் நாட்டினர் மட்டுமின்றி வெளி நாட்டினரும் சேர்ந்து பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு ஆராய்ச்சி வசதிகளும், கம்ப்யூட்டர் உதவியுடன் நோயாளிகளைப் பற்றிய விவரங்களை அறியும் வசதியும், கிளினிகல் லைப்ரரி வசதியும் உள்ளன. மேலும் சுமார் 1500 படுக்கை வசதிகள் கொண்ட அதி நவீன சிறப்பு மருத்துவமனையும் இதனுடன் இணைந்துள்ளது. இக்கல்லூரியானது நவீனக் கல்வியை ஆன்மிகச் சூழ்நிலையில் வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு www.aimshospital.org ஐத் தொடர்பு கொள்ளவும்.

அமிர்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( Amrita School of Arts and Sciences ) கொச்சி
இங்கு கணிப்பொறியியல், வணிகம், விஷுவல் மீடியா போன்ற வற்றில் இளங்கலைப் படிப்புகளும் மற்றும் வணிக மேலாண்மையில் முதுகலைப் படிப்பும் உள்ளன. இங்கு வணிகவியல் பிரிவும் (School of Business) தனியாக இயங்கி வருகிறது.இக்கல்லூரி கல்விப் பயிற்சி அளிப்பதுடன் நன்னடத்தை உணர்வும் லட்சிய உணர்வும் பெற உதவுகிறது.

அமிர்தா செவிலியர்( Nursing ) கல்லூரி- கொச்சி

இங்கு பட்டய , இளங்கலை மற்றும் முதுகலை செவிலியர் பட்டப் படிப்புகள் படிக்கும் வசதியும் உண்டு. குறுகிய காலச் சான்றிதழ்ப் படிப்புப் படிக்கும் வசதியும் உண்டு.

அமிர்தா பல்மருத்துவக் கல்லூரி (School of Dentistry)- கொச்சி
இங்கு 5 வருட பல் மருத்துவக் கல்வியை மாணவர்கள் பெறுகின்றனர். இங்கு பாரா டென்டல் படிப்பு, டென்டல் ஹைஜீன் மற்றும் டென்டல் மெக்கானிக்ஸ் இவற்றில் பட்டயப் படிப்புகளும், பல் மருத்துவ உதவியாளர் படிப்பும் வழங்கப்பெறுகின்றன.


அமிர்தா மருந்தியல் கல்லூரி (School of Pharmacy )- கொச்சி

இங்கு மருந்தியலில் மருத்துவர் பட்டப் படிப்பும் ( Pharm D ) இளங்கலைப் படிப்பும் ( B.pharm ) பல்வேறு உட்பிரிவுகளில் முதுகலைப் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

அமிர்தா பொறியியல் கல்லூரி (Amrita School of Engineering) அமிர்தபுரி
இங்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கணிப்பொறியியல் போன்ற பொறியியல் துறைப் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப் படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு அம்மாவின் ஆன்மிக வழிகாட்டுதலும் அன்பும் அரவணைப்பும் கிடைப்பது பெரும்பேறாகும்.

அமிர்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( Amrita School of Arts and Sciences ) , அமிர்தபுரி
இங்கு கணிப்பொறியியல், வணிகம், வணிக மேலாண்மை போன்றவற்றில் இளங்கலைப் படிப்பும் மற்றும் கணிப்பொறியியல், அறிவியல் உட்பிரிவுகளிலும் மற்றும் வணிக மேலாண்மையிலும் முதுகலைப் படிப்பும் உள்ளன. முதுகலை அறிவியலில் இரு துறைகள் ஒருங்கிணைந்த ஐந்து வருடப் படிப்பு (M.Sc Maths & amp; Physics ) அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இங்கு வணிகவியல் மேலாண்மைத் துறையும் (School of Business) சமூகநலப் பணித் துறையும் (Dept. of Social Work ) சிறப்பாகச் செயல்படுகின்றன. இங்கு சமூகநலப் பணியில்(MSW) முதுகலைப் படிப்பும் உண்டு.

அமிர்தா உயிரித் தொழில் நுட்பக் கல்லூரி (Amrita school Of Biotechnology )  அமிர்தபுரி
அமிர்தபுரியில் ஒரு உயிரித் தொழில் நுட்பக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு உயிரித் தொழில்நுட்பவியல் (பயோடெக்னாலஜி), நுண்ணுயிரியல் (Micro biology) முதலியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளும் (M.Sc .Bio-informatics ) உள்ளன. இங்கு ஆராய்ச்சிப் படிப்புகள் படிக்கும் வசதிகளும் இருக்கின்றன.

அமிர்தா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (Amrita school Of Ayurveda ) அமிர்தபுரி

இந்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி வள்ளிக்காவில் அமைந்துள்ளது. இதனுடன் இணைந்த சிறந்த ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றும் இயங்குகிறது. இங்கு நோயாளிகளுக்குத் தரம் வாய்ந்த சிகிச்சையும், பஞ்சகர்மாவும், பயிலும் மாணவர்களுக்குச் சிறந்த மருத்துவப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இங்கு ஆயுர்வேத மருத்துவப் படிப்பும் (BAMS) பஞ்சகர்மா மற்றும் மருந்தியலில் சான்றிதழ்ப் படிப்பு படிக்கும் வசதியும் உண்டு. இங்கு ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் பெரிய மையம் (Amrita Life ) ஒன்றும் அமைந்துள்ளது.

அமிர்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( Amrita School of Arts and Sciences ) மைசூர்
இது சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இயற்கைச் சூழலில் அமைந்த சிறந்த கல்வி நிறுவனமாகும். இங்கு கணிப்பொறியியல், வணிகம், வணிக மேலாண்மை போன்றவற்றில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளும் உள்ளன.

அமிர்தா கல்வியியல் கல்லூரி (Amrita School of Education ) மைசூர்.
இது ஒழுக்கமும், நற்பண்புகளும் மிகுந்த ஆசிரியர்களை உருவாக்கி அவர்கள் மூலம் சேவையும், மனித நேயமும் மிகுந்த மாணவச் சமுதாயத்தை உருவாக்குவதே இக்கல்வி நிறுவனத்தின் நோக்கமாகும். இங்கு கல்வியியல் பயில்பவர்களுக்குப் (B.Ed) படிப்பில் நவீனக் கற்பித்தல் தொழில்நுட்பங்களுடன் நன்னெறிக் கல்வியும் கற்பிக்கப்படுகின்றன.

அமிர்தா பொறியியல் கல்லூரி (Amrita School of Engineering), பெங்களூரு

இங்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்& கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ்& இன்ஸ்ட்ரூமென்டேஷன், பவர் எலெக்ட்ரானிக்ஸ், கணிப்பொறியியல் போன்ற பொறியியல் துறைகளில் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப் படுகின்றன.

அமிர்தா வணிகவியல் கல்லூரி (School of Business) பெங்களூரு

இங்கு வணிகவியலில் ஒரே நேரத்தில் இரு வருடங்களில் , இரு கல்வி நிறுவனங்களில் ( AMRITA , State University of New York, Buffalo, USA. ) இரண்டு முதுகலைப் பட்டப் படிப்புகளை (Dual Degree – MBA- MS) படிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை முழு நேர, பகுதிநேரப் படிப்புகளாகப் படிக்கும் வசதியும் உண்டு. மேலும் மாணவர்கள் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் 4 வாரங்கள் தங்கிப் படிக்கலாம்.

அமிர்தா ஆராய்ச்சிக் கூடம் ( Amrita Research Lab )

அமிர்தா பல்லைக்கழகத்தில் கல்வித்தொழில் நுட்பம், உயிரித் தொழில் நுட்பம் (Biotechnology), கணிணி வழிப் பொறியியல் (computational Engineering ) மின்வழிக் கற்றல், ( E- learning ) நானோ அறிவியல், (nano science) உடல்நலத் தொழில்நுட்பம், ( Digital health) மூலக்கூறு மருத்துவம், (Molecular medicine) கம்பியில்லா இணைப்பு, (Wireless network ) திசுப் பொறியியல், ( Tissue Engineering) சைபர் பாதுகாப்பு , (cyber security ) சூரிய செல்கள் ( Solar cells) போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அமிர்தபுரி, கொச்சி, எட்டிமடை, பெங்களூரு போன்ற இடங்களில் இதன் ஆய்வுக்கூடங்கள் அமைந்துள்ளன. அமிர்தா ஆராய்ச்சி இணையதளத்தைப் பார்க்கவும்.

தொழில் பயிற்சிப் பள்ளி

இளைய தலைமுறைக்குத் தொழில் துறையில் பயிற்சி அளிக்கும் இந்நிலையம் கருநாகப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. 1994ல் மாநிலத்தின் மிகச் சிறந்த தொழில் பயிற்சிப் பள்ளி என அரசின் அங்கீகாரம் பெற்றது.

அமிர்தா சிற்பக் கலாக்ஷேத்ரம் ( திருவனந்தபுரம் )

இது மத்திய அரசு உதவியுடன் இளைஞர்களுக்கு மரச்சிற்பம் செதுக்கும் கலையில் சிறப்புப் பயிற்சியும் படிப்புக்கான உதவித்தொகையும் வழங்கும் அமிர்தா பல்கலைக் கழகத்தின் ஒரு விரிவாக்கப் பயிற்சி நிறுவனமாகும். இங்கு நவீனத் தொழில்நுட்ப முறையையும் பாரம்பரிய முறையையும் ஒருங்கிணைத்து புதிய சம்பிரதாயங்களில் சிற்பிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அமிர்தா சம்ஸ்கிருத மேல்நிலைப்பள்ளி,பாரிப்பள்ளி
இங்கு சுமார் 4000க்கும் அதிகமான குழந்தைகள் படிக்கும் மேனிலைப் பள்ளி ஒன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு
+2 வரை சம்ஸ்கிருதப் படிப்புக்குச் சிறப்பான வசதி அளிக்கப்படுகிறது.


அமிர்த வித்யாலயம்

நவீனக் கல்வியுடன் நமது கலாசாரம், மற்றும் நற்குணங்களைப் புகட்டிச் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் அமிர்த வித்யாலயம் எனும் பள்ளிகள் நாட்டின் பலபாகங்களிலுமாக 57 இடங்களில் இயங்கி வருகின்றன.  தமிழகத்தில் சென்னை, மதுரை, திருப்பூர், கோவை, எட்டிமடை, நாகை, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இப்பள்ளிகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.amritavidyalayam.org ஐத் தொடர்பு கொள்ளவும்.


அமிர்தா காதுகேளாதோர் பள்ளி,(ASHIS) திருச்சூர்

கேட்கும் சக்தியும், பேசும் சக்தியும் குறைவாக உள்ள அல்லது முற்றிலும் இழந்த குழந்தைகள் ,தங்கள் பேசும் சக்தியையும் கேட்கும் சக்தியையும் மீண்டும் பெறுவதற்கான பயிற்சியையும், ஓரளவு கல்வியையும் இந்தப் பள்ளி அளிக்கிறது.