அமிர்தபுரிக்கு வடக்கே கொச்சி. தெற்கே திருவனந்தபுரம் விமான நிலையங்கள் உள்ளன.இரண்டுமே சுமார் 120 கி.மீ. தூரத்தில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல் வடக்கே ஆலப்புழைக்கும் தெற்கே கொல்லத்திற்கும் இடையே கருநாகப்பள்ளி என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து ( 10 கி.மீ.) பறயக்கடவு கிராமத்திற்குப் பேருந்து வசதி உண்டு. இக்கிராமத்தில் தான் அமிர்தபுரி ஆசிரமம் அமைந்துள்ளது.

பறயக்கடவில் வாகனங்களை நிறுத்த வசதி உண்டு. தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல் உள்ள ஓச்சிராவிலிருந்தும் (7கி.மீ ) கருநாகப்பள்ளியிலிருந்தும் வள்ளிக்காவிற்குப் பேருந்து வசதி உண்டு. அங்கிருந்து ஆசிரமம் கட்டியுள்ள அமிர்தசேது பாலத்தின் வழியாக நடந்து ஆசிரமத்தை அடையலாம். வடக்கே காயங்குளமும் (12 கி.மீ ) தெற்கே கொல்லமும் ( 30 கி.மீ ) அருகே உள்ள முக்கியமான இரயில் நிலையங்களாகும். இங்கிருந்தும் மேற்கூறியபடி பேருந்து மூலம் ஆசிரமத்தை அடையலாம்.

மாதா அமிர்தானந்தமயி மடம்
அமிர்தபுரி அஞ்சல், கொல்லம்- 690525
கேரளா.தொலைபேசி : (0476) 2896399 / 2897578 / 2896278 / 2895937 / 2895938
நமது இணையதளத்தின் முகவரி www.amritapuri.org
உணவு – தங்கும் வசதிகள்

ஆசிரமத்தில் பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் உண்டு. பேருந்தில் குழுக்களாக வரும் பக்தர்கள் தாங்கள் வரும் விவரத்தை ஆசிரமத்திற்கு முன்னரே அறிவிக்கவேண்டும்.

அமிர்தபுரியில் தங்கும் வசதி பற்றிய விவரங்களை அறிவதற்கு
0476-3241066 எனும் தொலைபேசி எண்ணில் ( காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை ) தொடர்பு கொள்ளவும். e-mail : stay{at}amritapuri.org.

பாதுகாப்பு ஏற்பாட்டை முன்னிட்டு அரசு அடையாள அட்டை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே ஆசிரமத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம். பக்தர்கள் அனைவரும் சிரமம் பாராது ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.