Category / இயற்கை

காடுகள் மற்றும் உயிரினங்களின் அவசியம் கட்டுரையின் தொடர்ச்சி……. கேள்வி: தனது பிரச்னைகளுக்குத் தானே பரிகாரம் தேடுவதற்குப் பதிலாக, மனிதன் ஆன்மிகத் தலைவர்களையோ அல்லது மகான்களையோ நாடுவது அவர்களுக்குத் தொல்லை தருவதாக இருக்குமா? அம்மா: நாம் வளர்த்த ஒரு செடி கருகிப் போனால் நாம் அழுவோம். ஆனால், அதை நினைத்து அழாமல், மற்றொரு செடியை நட்டு வளர்க்க வேண்டும். சிரத்தையுடன், அதே சமயம் பற்றின்றிக் கர்மம் செய்யுமாறே ஆன்மிகத் தலைவர்கள் கூறுகின்றனர். நடந்ததை நினைத்து மனிதன் சோர்ந்து விடக்கூடாது. […]

ஆன்மிக சாதனைகளும்…. கட்டுரையின் தொடர்ச்சி…. கேள்வி:சில உயிரினங்களின் வம்சம் அழிந்து வருவதைத் தடுக்கச் சமுதாய அளவில் நாம் செய்யக் கூடியது என்ன? அம்மா: இதற்கு ஒரு நியதியைக் கொண்டு வருவது நல்லது. ஆனால், அதைச் சரியான முறையில் பிறரைப் பின்பற்றவும், பின்பற்றச் செய்யவும் தொண்டர்கள் அவசியம். இன்று ஒரு நியதியை ஏற்படுத்தும் ஆளே அதை மீறுகிறான். அதனால், புதிய ஒரு நல்ல பண்பாட்டை வளர்ந்துவரும் இளந்தலைமுறைக்குக் கற்பிப்பதே நிலையான தீர்வாகும். ஆன்மிகக் கல்வியின் மூலமே இது சாத்தியமாகும். […]

ஐவகை யக்ஞங்களும் அவற்றின் தத்துவமும் கட்டுரையின் தொடர்ச்சி ….. கேள்வி: ஆன்மிக சாதனைகளுக்கும், இயற்கைப் பாதுகாப்பிற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் என்னென்ன? அம்மா: “ஈசாவாஸ்யமிதம் ஸர்வம்“. அனைத்திலும் ஈசனின் சைதன்யமே நிறைந்துள்ளது என்றே நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே, நம்மைப் பொறுத்தவரை, இயற்கைப் பாதுகாப்பு என்பது இறை ஆராதனையே ஆகும். பாம்பைக்கூட வணங்கும் பண்பாடே நம்மிடம் உள்ளது. அனைத்திலும் இறைவனைக் கண்டு, அனைத்தையும் இறைவனாக வணங்கும்படியே மதம் கூறுகிறது. இந்த உணர்வு இயற்கைமீது அன்பு செலுத்த நமக்குக் கற்பிக்கிறது. […]

இறைநம்பிக்கையும் நவீன அறிவியலும் கட்டுரையின் தொடர்ச்சி ….. கேள்வி: பழங்கால யக்ஞங்கள் போன்றவை இக்காலத்தில் கடைபிடிக்கக் கூடியவையா? அம்மா: யக்ஞம் என்பது எந்தத் தேசத்திலும், எந்தக் காலத்திலும், எல்லா மக்களும் பரஸ்பரம் அன்புடனும், ஒற்றுமையுடனும், இயற்கை நியதிகளுக்கேற்ப வாழக் கற்றுத் தருகின்ற தத்துவமாகும். இயற்கையிடமிருந்து பெறுவதில் ஒரு அம்சத்தையாவது இயற்கைக்குத் திருப்பிக் கொடுக்க நாம் கடமைப்பட்டவர்கள் என்ற கருத்திலிருந்தே பஞ்ச யக்ஞங்கள் தோன்றின. ரிஷி யக்ஞம் (ஆன்மிக சாஸ்திரக் கல்வி), தேவ யக்ஞம் (பூஜை, ஹோமம் போன்ற […]

இயற்கையும் மனிதனும் கட்டுரையின் தொடர்ச்சி கேள்வி: மனிதனிடம் பயபக்தியை வளர்க்கும் மதத்தைவிட, இயற்கையைப் பற்றிக் கற்பிக்கும் நவீன அறிவியலல்லவா சிறந்தது? அம்மா: மதத்தில் இல்லாத எதையும் அறிவியலில் காணமுடியாது. மதம் இயற்கையைக் காப்பாற்றுமாறுதான் கூறுகிறது. அனைத்தையும் இறைவனாகக் கண்டு அன்பு செலுத்தவும், தொண்டு செய்யவுமே மதம் கற்பிக்கிறது. மலைகளையும், நதிகளையும், மரங்களையும், காற்றையும், சூரியனையும், பசுக்களையும் ஒவ்வொரு விதத்தில் நம் முன்னோர் ஆராதித்து வந்தனர். பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் அனைத்தும் நமக்குக் கிடைப்பதுபோல், மதத்திலிருந்து நமக்குத் […]

பயபக்தியும் அறிவியலும் கட்டுரையின் தொடர்ச்சி…. கேள்வி: மனிதனிடம் பயபக்தியை வளர்க்கும் மதத்தைவிட இயற்கையைப் பற்றிக் கற்பிக்கும் நவீன அறிவியல் அல்லவா சிறந்தது? அம்மா: மதத்தில் இல்லாத எதையும் அறிவியலில் காணமுடியாது. மதம் இயற்கையைக் காப்பாற்றுமாறுதான் கூறுகிறது. அனைத்தையும் இறைவனாகக் கண்டு அன்பு செலுத்தவும், தொண்டு செய்யவுமே மதம் கற்பிக்கிறது. மலைகளையும், நதிகளையும், மரங்களையும், காற்றையும் சூரியனையும், பசுக்களையும் ஒவ்வொரு விதத்தில் நம் முன்னோர் ஆராதித்து வந்தனர். பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் அனைத்தும் நமக்கு கிடைப்பதுபோல், மதத்திலிருந்து […]

பயபக்தியும் அறிவியலும் நமது எல்லாச் செயல்களிலும் பயபக்தியைக் காணலாம். பயம் இருப்பதால்தான் நாம் எதையும் கவனமாகச் செய்கிறோம். இல்லாவிடில், நமக்குச் சிரத்தை வருவது கடினம். நடக்கும்போது கவனமாக இருப்பது, விழுந்துவிடுவோம் என்ற பயத்தால் ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் இயல்புக்கேற்ப மனதில் தோன்றியதைப் பேச ஆரம்பித்தால், அனாவசியமான பலவற்றைப் பேசநேரிடும். அது பின்னர் வழக்கானால் சிறைக்குச் செல்ல நேரிடும். அந்தப் பயத்தால் பேச்சிலும், செயலிலும் கவனம் செலுத்துகிறோம். சிரத்தையுடன் படிப்பது தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால்தான். இப்படிப் பார்த்தால் […]