பயபக்தியும் அறிவியலும் கட்டுரையின் தொடர்ச்சி…. கேள்வி: மனிதனிடம் பயபக்தியை வளர்க்கும் மதத்தைவிட இயற்கையைப் பற்றிக் கற்பிக்கும் நவீன அறிவியல் அல்லவா சிறந்தது? அம்மா: மதத்தில் இல்லாத எதையும் அறிவியலில் காணமுடியாது. மதம் இயற்கையைக் காப்பாற்றுமாறுதான் கூறுகிறது. அனைத்தையும் இறைவனாகக் கண்டு அன்பு செலுத்தவும், தொண்டு செய்யவுமே மதம் கற்பிக்கிறது. மலைகளையும், நதிகளையும், மரங்களையும், காற்றையும் சூரியனையும், பசுக்களையும் ஒவ்வொரு விதத்தில் நம் முன்னோர் ஆராதித்து வந்தனர். பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் அனைத்தும் நமக்கு கிடைப்பதுபோல், மதத்திலிருந்து […]