Category / அம்மாவின் அருளுரை

இன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள் இன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள். இயற்கை சீற்றங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.இருப்பினும் அவை ஏற்படும் முன்பே அறியவல்ல தொழில்நுட்ப வசதிகள் இன்று இருக்கின்றன. ஆனால், மனித மனதில் ஏற்படவல்ல பேரழிவுகளை முன்பே தெரிவிக்கக்கூடிய இயந்திரத்தை இதுவரை அறிவியல் கண்டுபிடிக்கதொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்க இயலவில்லை. புவியின் வெப்பம் அதிகரித்தல், பருவ நிலை மாற்றங்கள், மேலும், மனிதன் பூமி மற்றும் இயற்கையுடைய எதிர்காலம் போன்றவற்றைப்பற்றி ஆராயவும்,பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கவும், மாநாடுகளும், விவாதங்களும், உயர்மட்ட […]

இன்று பல துறைகளிலும் பாரதத்தின் முன்னேற்றத்தைக் காணும் போது, அது மிக்க எதிர்பார்ப்பளிப்பதாக காணப்படுகிறது. பொருளாதார துறையிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையிலும் பாரதம்  முன்னேறிக்கொண்டிருக்கிறது. ‘மங்கள்யான்’ மற்றும் ‘செவ்வாய் ‘ கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விண்வெளிக்கோள்  போன்றவை உலக நாடுகளின் பெரு மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறது. ஆனால் இங்குள்ள  ஒவ்வொரு ஏழையின் வாழ்வும் மங்களகரமானால் மட்டுமே, பாரதத்தின் வளர்ச்சியை முழுமையடைந்ததாகக் கருதமுடியும். சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாரதமெங்கும்  மடம் 101 கிராமங்களை தத்தெடுத்தது. அவற்றில் பல கிராமங்களின் நிலையும் கவலைக்கிடமாக […]

ஞானமின்றி நாம் எந்த செயலைப் புரிந்தாலும் அது நம்மையே நாம் இழப்பதைப் போன்றதாகும். நாம் வாகனத்தை ஓட்ட கற்றபின் ஓட்டினால் 98% சென்றடைய வேண்டிய லட்சியத்தை அடைவோம். ஆனால் வாகனத்தை ஓட்ட கற்காமல் ஓட்டினால் அது நம்மை மருத்துவமனைக்கே கொண்டு செல்லும். ஞானத்துடன் புரியும் செயலானது வரைபடத்தின் உதவியுடன் பயணம் செய்வதற்கு நிகரானது. ஞானமின்றி செயல் புரிந்தால் அது நம்மை வழி பிறழச் செய்யும். வாழ்வில் தன்னம்பிக்கை மிகவும் இன்றியமையாததாகும். இருள் நிறைந்த வழியே தனியாகச் சென்றால் நமக்கு அச்சமேற்படும். ஆனால் நம்முடன் ஒரு […]

அன்பு என்பது நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்தாகும் இறைவன் எல்லைகளும், வேற்றுமைகளும் இல்லாத அகண்டமான ஓருமையாவார்.இயற்கையிலும், அண்டத்திலும், மிருகங்களிலும், மனிதர்களிலும், செடி கொடிகளிலும், மரங்களிலும், பறவைகளிலும், ஓரோர் அணுவிலும், இறையாற்றல் நிறைந்து ததும்பி நிற்கிறது. உயிருள்ளதும் உயிரற்றதுமான அனைத்தும் இறைமயமேயாகும்.இந்த உண்மையை நாம் முழுவதுமாக அறிந்தால்,நம்மால் நம்மீதும், மற்றவர் மீதும் இந்த உலகின் மீதும் அன்பு செலுத்த மட்டுமே இயலும். அன்பின் முதல் அலையை நாம் நம்மிடமிருந்துதான் தோற்றுவிக்கவேண்டும். அமைதியாக உள்ள ஒரு குளத்தில் […]

அன்பும் ஒற்றுமையும் வண்ணங்களின் இணக்கத்தோடும் ஆகாயத்தில் தோன்றும் வானவில்லைப் போலவே இன்று இங்கே இந்த பூமியில் அதே போன்ற ஒரு வானவில்லைக் காண்பது போல அம்மாவுக்குத் தோன்றுகிறது. அம்மாவின் அன்புக்குழந்தைகள் அன்போடும் ஒற்றுமையோடும் இங்கே ஒன்றாகக் கூடியிருப்பதே அந்தப் பூரண அழகு மிளிரும் வானவில். இதே அன்பும் ஒற்றுமையும் என்றும் நிலைத்திட இறைவனின் அருள் என் குழந்தைகளுக்கு கிடைத்திடட்டும். படைத்தலைவர்கள் இன்று நம் நாட்டுக்கும் உலகுக்கும் தேவையாயிருப்பது, அன்பின் சக்தியை தம்முள் விழிப்படையச் செய்து அச்சமற்று தீரர்களாக […]

சிறப்புரை: ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள், அமிர்தா பல்கலைக் கழக வேந்தர், ஐ.நா சபை, நியூயார்க், ஜூலை 8, 2015 இங்கு கூடியிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது நமஸ்காரம். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஐ.நா. – யூ.என்.ஏ.ஐ. ஆகிய நிறுவனங்களோடும் இம்முயற்சியில் இணைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயல்பாகவே ஆன்மிக சிந்தனையையும் செயலையும் நான் வாழ்வின் விரதமாகக் கொண்டவள். ‘ அத்தகைய ஒருவருக்கு இங்கே […]

இவ்வளவு வறுமையிலும், இப்படிப்பட்ட ஏழ்மையிலும் கூட மற்ற உயிரினங்களைப் பற்றிச் சிந்திக்கவும், அவற்றின் வலியை உணரும் தன்மையையும் நமது முன்னோர்கள் பெற்றிருந்தனர்.

இறைவனிடம் நமக்கு உள்ள சமர்ப்பணம் நமது எல்லா மனச்சுமைகளையும் குறைத்து விடும். உண்மையில், நமது வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களும் நமது விருப்பப்படி நடப்பதில்லை. அடுத்த மூச்சு கூட நம் கையில் உண்டு என்பதை நாம் உறுதியாகக் கூறமுடியாது. எனவே, எல்லாவற்றையும் இறைவனிடம் அர்ப்பித்து விட்டு செயல்கள் புரியவேண்டும் என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியதாகும். ஆனால், நான் செய்கிறேன் என்ற எண்ணம் நமக்கு ஏற்படக் கூடாது. இறைவனது திருவருள் துணை கொண்டுதான் நான் பணிபுரிகிறேன் என்ற […]