பக்தை : அம்மா, வாழ்வில் அமைதியும், நிம்மதியும் இல்லை துன்பமே நிறைந்துள்ளது. இதனால் இப்படி ஒரு வாழ்வு எதற்கு எனத்தோன்றுகிறது. அம்மா: மகளே, உன்னிடமுள்ள அகங்காரத்தான் உனது துன்பத்திற்குக் காரணம். அமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன் உன் உள்ளத்தில் இருக்கிறார். ஆனால், அகங்காரத்தை நீக்கி சாதனை செய்தால்தான் அதை அறிய முடியும். குடையைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு இனி வெயிலில் ஒரு அடி வைக்கக்கூட என்னால் முடியாது, நான் தளர்ந்துபோய்விட்டேன் என்று கூறுவது போலிருக்கிறது உனது பேச்சு. […]
Category / அம்மாவின் அருளுரை
அம்மாவின் 66வது அவதாரத் திருவிழா அருளுரை 27 செப்டம்பர் 2019, அமிர்தபுரி – அமிர்தவர்ஷம் 66 குழந்தைகளே, அனைவரும் ஒற்றுமையுடனும், அன்புடனும் இங்கே குழுமியிருப்பதைக் காணும்போது, பல நிறமுள்ள மலர்களால் அழகாகக் கட்டப்பட்ட மனங்கவரும் பூமாலையைப் போல் அம்மாவுக்குத் தோன்றுகிறது. உங்களது இவ்வுள்ளமும், தொண்டு மனப்பான்மையும் மேன்மேலும் வளர்ந்து ; பரந்ததாகி. மக்களுக்குப் பயன்படட்டும் என்று அம்மா பரமாத்மாவிடம் வேண்டிக்கொள்கிறார். இது ஒரு மகிழ்ச்சியின் நிமிடம் என்றாலும், உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் இயற்கைச் சீற்றங்களாலும், கலவரங்களாலும், […]
குழந்தைகளே, நல்ல சிந்தனைகளையும், குணங்களையும் வளர்த்து, மனதைத் தூய்மையுள்ளதாகவும், பரந்ததாகவும் ஆக்குவதுதான் எல்லா ஆன்மிக சாதனைகளின் லட்சியமாகும். இறைகுணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால், இன்று அவை விதை வடிவில் உள்ளன. சாதனையின் மூலம் நாம் அவற்றை வளர்க்கவேண்டும். இறைவனின் விக்கிரகத்தையோ, சித்திரத்தையோ வழிபடும் ஒரு பக்தன், அதில் எல்லாம்வல்ல இறைவனையே தரிசிக்கிறான். அன்பு வடிவினனும், கருணை வடிவினனுமான இறைவனை வணங்கும் பக்தனின் மனதிலும் அந்தக் குணங்கள் நாளடைவில் வளர்கின்றன. இவ்விதமாக, அனைத்திலும் இறைவனைத் தரிசித்து, அன்புசெய்யவும், […]
(ஐயப்ப பக்தர்கள் சங்கமம், திருவனந்தபுரம், ஜனவரி 20, 2019) அன்பின் வடிவாகவும் ஆன்மாவின் வடிவாகவும் இங்குள்ள அனைவருக்கும் அம்மாவின் பணிவான வணக்கங்கள்.அண்மையில் சபரிமலை திருக்கோவில் தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் வருந்தத்தக்கவையாகும். திருக்கோவில் பிரதிஷ்டையை பற்றியும் ஆலய வழிபாடு முறைகள் பற்றியும் ஞானம் இல்லாதது தான் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்.ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதற்குரிய பிரதிஷ்டை சங்கல்பம் உள்ளது. அதை அலட்சியம் செய்வது சரியல்ல. ஆலயத்தில் உள்ள விக்கிரகத்திற்கும் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். […]
ஒருமுறை உயர்கல்வி பயின்ற இளைஞன் ஒருவன், வேலை தேடி நேர்முகத்தேர்வுக்குச் சென்றான்.
குழந்தைகளே,நான் விரும்புவதை காணவும், கேட்கவும், சொல்லவும் கூடிய சுதந்திரம் இருந்து விட்டால், நம் எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகிறோம். ஆனால், இக்கருத்து சரியல்ல. சுதந்திரமின்மை துன்பத்திற்கு காரணம் என்பது போல், அளவுகடந்த சுதந்திரமும் நமது துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரணமாகிவிடும். பாரத மக்களுக்கு இருப்பதைவிட, மேலை நாட்டு மக்களுக்கு சுதந்திரம் மிக அதிகமாக உள்ளது. ஆனால், அவர்களுக்கும் துன்பமும், நிராசையும் உண்டு. சரியான சுதந்திரம் வெளியில் உள்ளதல்ல. மாறாக, அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும்; தனக்குள் […]
பிறப்பு இறப்பு அற்ற சர்வேஸ்வரன் ஒரு மனிதக் குழந்தையாக வந்து அஷ்டமிதிதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நன்னாளே ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகும் பகவான் அவதரித்த நேரத்தில் சுற்றிலும் ஒளி நிறைந்தது. திசைகள் தெளிவடைந்தன. மனிதர்களின் மனங்கள் ஆனந்தமடைந்தன. செடிகளும் மரங்களும் பூக்கள் நிறைந்ததாக மாறியது. பகவான் இருந்த சிறைக்கதவுகள் தானே திறந்தன. சிறையிலிருந்த வசுதேவருடைய கால்களில் கட்டிய சலங்கைகள் தானே அவிழ்ந்ததன. குழந்தை கிருஷ்ணருடன் அவர் கடந்து செல்ல யமுனை நதி வழிவிட்டது. என்றெல்லாம் பாகவதத்தில் கூறப்படுகிறது. […]
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உடலை நீத்த காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது சங்கராச்சாரியார் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அம்மா தனது இதய பூர்வமான இறுதி அஞ்சலியை தெரிவித்தார். அவரின் பிரிவால் வாடும் அவரது பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் தனது அன்பான ஆறுதலையும் தெரிவித்தார். சங்கராச்சாரியார் அவர்களின் இறுதிச்சடங்கிலும் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ள அம்மாவின் மூத்த துறவிச்சீடரான ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தபுரி அவர்களை அனுப்பி வைத்தார். பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிரிவு மிகவும் வேதனை அளிக்கிறது. நான் […]