Tag / கர்மம்

ஞானமின்றி நாம் எந்த செயலைப் புரிந்தாலும் அது நம்மையே நாம் இழப்பதைப் போன்றதாகும். நாம் வாகனத்தை ஓட்ட கற்றபின் ஓட்டினால் 98% சென்றடைய வேண்டிய லட்சியத்தை அடைவோம். ஆனால் வாகனத்தை ஓட்ட கற்காமல் ஓட்டினால் அது நம்மை மருத்துவமனைக்கே கொண்டு செல்லும். ஞானத்துடன் புரியும் செயலானது வரைபடத்தின் உதவியுடன் பயணம் செய்வதற்கு நிகரானது. ஞானமின்றி செயல் புரிந்தால் அது நம்மை வழி பிறழச் செய்யும். வாழ்வில் தன்னம்பிக்கை மிகவும் இன்றியமையாததாகும். இருள் நிறைந்த வழியே தனியாகச் சென்றால் நமக்கு அச்சமேற்படும். ஆனால் நம்முடன் ஒரு […]

அன்பு என்பது நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்தாகும் இறைவன் எல்லைகளும், வேற்றுமைகளும் இல்லாத அகண்டமான ஓருமையாவார்.இயற்கையிலும், அண்டத்திலும், மிருகங்களிலும், மனிதர்களிலும், செடி கொடிகளிலும், மரங்களிலும், பறவைகளிலும், ஓரோர் அணுவிலும், இறையாற்றல் நிறைந்து ததும்பி நிற்கிறது. உயிருள்ளதும் உயிரற்றதுமான அனைத்தும் இறைமயமேயாகும்.இந்த உண்மையை நாம் முழுவதுமாக அறிந்தால்,நம்மால் நம்மீதும், மற்றவர் மீதும் இந்த உலகின் மீதும் அன்பு செலுத்த மட்டுமே இயலும். அன்பின் முதல் அலையை நாம் நம்மிடமிருந்துதான் தோற்றுவிக்கவேண்டும். அமைதியாக உள்ள ஒரு குளத்தில் […]