Category / அம்மாவின் அருளுரை

கொரானா வைரஸின் தாக்கத்தினால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பல நாட்களாக நாமெல்லாம் நம் வீடுகளுக்குள்ளோ அடுக்ககங்களுக்குள்ளோ அடைபட்டு இருக்கிறோம். உங்களில் பெரும்பான்மையான பேர்களுக்கு இது வெறுத்துப் போயிருக்கும்; துன்பமாயும் கூட இருக்கும். செய்யவேண்டிய காரியங்களுக்காகப் போட்ட திட்டங்கள் எல்லாம் முடங்கிப் போயிருக்கும். ஆனாலும் என் குழந்தைகள் முடிந்தவரை மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருக்க முயலவேண்டும். வைரஸின் பாதிப்பு இந்த அளவிலாவது கட்டுக் கோப்பில் இருக்கிறது என்றால் அதற்கு நீங்களெல்லாம் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்ததே காரணம். இப்போது நமது சிரத்தை […]

உலகம் முழுமையுமே பாதிக்கப்பட்டு வலியில் அழுவதைக் காண்கையில் என் இதயம் வேதனயால் துடிக்கிறது” என்று அம்மா, இன்று மடத்திலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ” இந்நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மன அமைதி பெறவும், உலகம் சாந்தி பெறவும் நாமெல்லாம் இறைவனின் அருள் வேண்டிப் பிரார்த்திப்போம்.” கடந்த சில பத்தாண்டுகளாகவே அம்மா மனிதகுலம் தான் வாழும் வாழ்கக்கை முறைமையை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி வற்புறுத்தி வந்திருக்கிறார். இயற்கையோடு இயைந்த விதத்தில் […]

கொரோனா வைரஸ் பற்றி அம்மாவின்  அறிவுரை அம்மாவின் குழந்தைகள் கொரானா வைரஸ் பற்றிய அச்சத்தில் வாழ்கிறீர்கள் என்பதை அம்மா அறிவேன். அமமா உங்கள் எல்லாரையும் பற்றி நினைக்கிறேன்; உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் எல்லாரும் மிகுந்த எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டிய நேரம் இது. இந்த சவாலை துணிச்சலோடும், சுய கட்டுப்பாடோடும் ஒற்றுமையாகவும் எதிர்கொள்ளவேண்டிய நேரம் இது. நீங்களெல்லாம் அச்சத்துடன் இருக்கிறீர்கள் என்று அம்மாவுக்குத் தெரிகிறதென்றாலும், அச்சம் எவ்விதத்திலும் நமக்கு உதவப் போவதில்லை.  வேண்டியது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மட்டுமே. இப்போது துணிச்சல் தான் அத்தியாவசியம். துணிச்சல் இருந்தால் எதையுமே நாம் வெற்றிகொள்ள முடியும். அதனால் பயத்தை விட்டொழித்து […]

சிவராத்திரி என்றவுடன் நாம், அது பகவான் சிவனின் இரவு என்றும், சிவனுக்கு வேண்டிய இரவு என்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் பகவான் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு இரவும் இல்லை பகலும் இல்லை. அவர் உறங்குவதும் இல்லை. எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவ பகவான் ஆகும். சிவராத்திரி, விரதங்கள், விழாக்கள், ஆச்சார அனுஷ்டானங்கள் போன்றவை எல்லாம் நமக்கு வேண்டியேயன்றி, அது கடவுளுக்கு அல்ல. நாம் இதிலிருந்தெல்லாம் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினை என்னவெனில் “நீ உன்னை அறிவாயாக” எனும் செய்தியேயாகும். சிவன் […]

கேள்வி: அம்மா, மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா? அம்மா: ஆன்மிக சிந்தனையாக இருந்தால் சக்தி கிடைக்கும். உறுதியான மனதை நாம் பெறலாம். இறைவன் தியாகம், அன்பு கருணை இவற்றின் உறைவிடமாவார். இறைவனைப்பற்றி நினைக்கும் அளவுக்கு நம்மிடமும் அந்த நல்ல குணங்கள் வளருகின்றன. மனம் விரிவடைகிறது. ஆனால், உலகியல் விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் மனம் உலகப் பொருள்களால் நிறைகிறது. தொடர்ந்து பலப்பல சிந்தனைகள் மனதில் மாறிமாறித் தோன்றுகின்றன. எண்ணங்களுக்கேற்பு பலன்கள் செயல்படுகின்றன. தீய குணங்கள் அதிகரிக்கின்றன. மனம் குறுகியதாகிறது. […]

ஒவ்வொருவரின் இயல்புக்கு ஏற்பவே குரு உபதேசங்களை வழங்குகிறார். ஒரே சூழ்நிலையில் இருவரிடம், இரு மாறுபட்ட முறையில் உபதேசிக்கக் கூடும். மற்றவருக்கு அளித்த அதே உபதேசத்தை எனக்கு அளிக்காதது ஏன் என்று சீடன் சிந்திப்பது முட்டாள்தனமாகும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் சீடனை வழிநடத்துவது எப்படி என்பது குருவுக்கு மிக நன்றாகத் தெரியும். அதனால் குருவை முழுமையாகப் பின்பற்றுவதுதான் சீடன் இலட்சியத்தை அடைவதற்கான எளிய வழி. இருவர் ஒரு ஆசிரமத்தில் வேலை செய்து வந்தனர். அதில் ஒருவருக்கு புகைபிடிக்க விருப்பம் ஏற்பட்டது. […]

பக்தை: அம்மா, எனக்குத் தெரிந்த எல்லாத் தெய்வங்களையும் வணங்கினேன். சிவனையும், தேவியையும், மற்ற பல மந்திரங்கள் மூலம் பல தெய்வங்களையும் வழிபட்டேன். ஆனால், அவற்றால் ஒரு நன்மையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அம்மா: மகளே, ஒரு மனிதன் தாகத்தால் வருந்தினான். அருகில் எங்கும் குடிநீர் கிடைக்கவில்லை. யாரோ ஒருவர், இந்த இடத்தில் தோண்டினால் விரைவில் நீர் கிடைக்கும் என்று கூறினார். உடனே அவன் அங்கு சிறிய குழி தோண்டினான். தண்ணீர் கிடைக்கவில்லை சிறிது தூரத்தில் மற்றொகு குழி தோண்டினான். […]

பக்தை: அம்மா, சாதனை செய்வதால் மன அமைதி கிடைக்குமா ? அம்மா: மகளே, சாதனை செய்வதால் மட்டும் மன அமைதி.கிடைப்பதில்லை. அகங்காரத்தை நீக்கி சாதனை செய்தால்தான் சாதனையால் வரும் நன்மையை அனுபவிக்க முடியும்; அமைதியையும், நிம்மதியையும் பெற முடியும். கடவுளை வணங்குபவர்கள் எல்லோரும் நிம்மதியாகஇருக்கிறார்களா என்று சிலர் கேட்பதுண்டு. தனது லட்சியம் என்ன என்பதைப் பரிந்துகொண்டு வணங்கினால் அல்லவா தனது பலவீனங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும், அவற்றை நீக்கி மனதூய்மை பெறவும் முடியும். சாஸ்திரங்களைப் புரிந்துகொண்டு, சத்சங்கம் கேட்டு அதன்படி வாழ்பவர்கள் […]