ஒவ்வொருவரின் இயல்புக்கு ஏற்பவே குரு உபதேசங்களை வழங்குகிறார். ஒரே சூழ்நிலையில் இருவரிடம், இரு மாறுபட்ட முறையில் உபதேசிக்கக் கூடும். மற்றவருக்கு அளித்த அதே உபதேசத்தை எனக்கு அளிக்காதது ஏன் என்று சீடன் சிந்திப்பது முட்டாள்தனமாகும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் சீடனை வழிநடத்துவது எப்படி என்பது குருவுக்கு மிக நன்றாகத் தெரியும். அதனால் குருவை முழுமையாகப் பின்பற்றுவதுதான் சீடன் இலட்சியத்தை அடைவதற்கான எளிய வழி. இருவர் ஒரு ஆசிரமத்தில் வேலை செய்து வந்தனர். அதில் ஒருவருக்கு புகைபிடிக்க விருப்பம் ஏற்பட்டது. […]