சிவராத்திரி என்றவுடன் நாம், அது பகவான் சிவனின் இரவு என்றும், சிவனுக்கு வேண்டிய இரவு என்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் பகவான் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு இரவும் இல்லை பகலும் இல்லை. அவர் உறங்குவதும் இல்லை. எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவ பகவான் ஆகும். சிவராத்திரி, விரதங்கள், விழாக்கள், ஆச்சார அனுஷ்டானங்கள் போன்றவை எல்லாம் நமக்கு வேண்டியேயன்றி, அது கடவுளுக்கு அல்ல. நாம் இதிலிருந்தெல்லாம் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினை என்னவெனில் “நீ உன்னை அறிவாயாக” எனும் செய்தியேயாகும். சிவன் […]