Tag / சாதனை

பக்தை: அம்மா, சாதனை செய்வதால் மன அமைதி கிடைக்குமா ? அம்மா: மகளே, சாதனை செய்வதால் மட்டும் மன அமைதி.கிடைப்பதில்லை. அகங்காரத்தை நீக்கி சாதனை செய்தால்தான் சாதனையால் வரும் நன்மையை அனுபவிக்க முடியும்; அமைதியையும், நிம்மதியையும் பெற முடியும். கடவுளை வணங்குபவர்கள் எல்லோரும் நிம்மதியாகஇருக்கிறார்களா என்று சிலர் கேட்பதுண்டு. தனது லட்சியம் என்ன என்பதைப் பரிந்துகொண்டு வணங்கினால் அல்லவா தனது பலவீனங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும், அவற்றை நீக்கி மனதூய்மை பெறவும் முடியும். சாஸ்திரங்களைப் புரிந்துகொண்டு, சத்சங்கம் கேட்டு அதன்படி வாழ்பவர்கள் […]

குழந்தைகளே, நல்ல சிந்தனைகளையும், குணங்களையும் வளர்த்து, மனதைத் தூய்மையுள்ளதாகவும், பரந்ததாகவும் ஆக்குவதுதான் எல்லா ஆன்மிக சாதனைகளின் லட்சியமாகும். இறைகுணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால், இன்று அவை விதை வடிவில் உள்ளன. சாதனையின் மூலம் நாம் அவற்றை வளர்க்கவேண்டும். இறைவனின் விக்கிரகத்தையோ, சித்திரத்தையோ வழிபடும் ஒரு பக்தன், அதில் எல்லாம்வல்ல இறைவனையே தரிசிக்கிறான். அன்பு வடிவினனும், கருணை வடிவினனுமான இறைவனை வணங்கும் பக்தனின் மனதிலும் அந்தக் குணங்கள் நாளடைவில் வளர்கின்றன. இவ்விதமாக, அனைத்திலும் இறைவனைத் தரிசித்து, அன்புசெய்யவும், […]