Tag / பொறுமை

ஒரு கிராம மக்கள் மிகுந்த ஒற்றுமையோடும் அமைதியோடும் வாழ்ந்து வந்தனர். அக்கிராமத்தினர் இவ்விதம் ஒற்றுமையாக வாழ்வதற்கு, அந்தக் கிராமத்தில் சிறந்த உதாரணமாக ஒரு குடும்பம் வாழ்ந்து வந்ததே இதற்குக் காரணமாகும். எந்த வீட்டிலாவது தம்பதியருக்கிடையே சண்டை ஏற்பட்டால், உடனே அவர்களில் ஒருவர், ” அந்த வீட்டிலுள்ள பெண்மணியைப் பார். எவ்வளவு ஒற்றுமையாகத் தனது கணவருடன் வாழ்கிறார்? ஏதாவது சண்டையோ சச்சரவோ அவர்கள் வீட்டில் எப்போதாவது கேட்டதுண்டா? அவர்கள் எவ்வளவு அன்புடன் வாழ்கிறார்கள்? அவரைப் போலப் பொறுமையாக இருக்க […]

நாடு முழுவதும் சொற்பொழிவுகளும் பேருரைகளும் நடக்கும் காலக்கட்டம் இது. ஆன்மிகப் பேருரை, கலாசார விரிவுரை, அரசியல் கூட்டம், சமயச் சொற்பொழிவு, நாத்திகச் சொற்பொழிவு- அதிகம் சொல்வானேன்?! ஒவ்வொருவரும் பேச ஏதாவது ஒரு விஷயம் உள்ளது. உலகில் எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் உரையாற்ற அதிகாரம் இருப்பதாகவே அனைவரும் எண்ணுகின்றனர். இதைச் சொல்லும் போது அம்மாவுக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ஒரு சிறுவன், ” எங்கள் ஆசிரியர் எவ்வளவு பெரிய மகான் என்று தெரியுமா? என்று […]