Tag / கருணை

குழந்தைகளே, நல்ல சிந்தனைகளையும், குணங்களையும் வளர்த்து, மனதைத் தூய்மையுள்ளதாகவும், பரந்ததாகவும் ஆக்குவதுதான் எல்லா ஆன்மிக சாதனைகளின் லட்சியமாகும். இறைகுணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால், இன்று அவை விதை வடிவில் உள்ளன. சாதனையின் மூலம் நாம் அவற்றை வளர்க்கவேண்டும். இறைவனின் விக்கிரகத்தையோ, சித்திரத்தையோ வழிபடும் ஒரு பக்தன், அதில் எல்லாம்வல்ல இறைவனையே தரிசிக்கிறான். அன்பு வடிவினனும், கருணை வடிவினனுமான இறைவனை வணங்கும் பக்தனின் மனதிலும் அந்தக் குணங்கள் நாளடைவில் வளர்கின்றன. இவ்விதமாக, அனைத்திலும் இறைவனைத் தரிசித்து, அன்புசெய்யவும், […]

இன்று பல துறைகளிலும் பாரதத்தின் முன்னேற்றத்தைக் காணும் போது, அது மிக்க எதிர்பார்ப்பளிப்பதாக காணப்படுகிறது. பொருளாதார துறையிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையிலும் பாரதம்  முன்னேறிக்கொண்டிருக்கிறது. ‘மங்கள்யான்’ மற்றும் ‘செவ்வாய் ‘ கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விண்வெளிக்கோள்  போன்றவை உலக நாடுகளின் பெரு மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறது. ஆனால் இங்குள்ள  ஒவ்வொரு ஏழையின் வாழ்வும் மங்களகரமானால் மட்டுமே, பாரதத்தின் வளர்ச்சியை முழுமையடைந்ததாகக் கருதமுடியும். சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாரதமெங்கும்  மடம் 101 கிராமங்களை தத்தெடுத்தது. அவற்றில் பல கிராமங்களின் நிலையும் கவலைக்கிடமாக […]

சிறப்புரை: ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள், அமிர்தா பல்கலைக் கழக வேந்தர், ஐ.நா சபை, நியூயார்க், ஜூலை 8, 2015 இங்கு கூடியிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது நமஸ்காரம். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஐ.நா. – யூ.என்.ஏ.ஐ. ஆகிய நிறுவனங்களோடும் இம்முயற்சியில் இணைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயல்பாகவே ஆன்மிக சிந்தனையையும் செயலையும் நான் வாழ்வின் விரதமாகக் கொண்டவள். ‘ அத்தகைய ஒருவருக்கு இங்கே […]