பக்தை : அம்மா, வாழ்வில் அமைதியும், நிம்மதியும் இல்லை துன்பமே நிறைந்துள்ளது. இதனால் இப்படி ஒரு வாழ்வு எதற்கு எனத்தோன்றுகிறது. அம்மா: மகளே, உன்னிடமுள்ள அகங்காரத்தான் உனது துன்பத்திற்குக் காரணம். அமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன் உன் உள்ளத்தில் இருக்கிறார். ஆனால், அகங்காரத்தை நீக்கி சாதனை செய்தால்தான் அதை அறிய முடியும். குடையைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு இனி வெயிலில் ஒரு அடி வைக்கக்கூட என்னால் முடியாது, நான் தளர்ந்துபோய்விட்டேன் என்று கூறுவது போலிருக்கிறது உனது பேச்சு. […]