ஐவகை யக்ஞங்களும் அவற்றின் தத்துவமும் கட்டுரையின் தொடர்ச்சி ….. கேள்வி: ஆன்மிக சாதனைகளுக்கும், இயற்கைப் பாதுகாப்பிற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் என்னென்ன? அம்மா: “ஈசாவாஸ்யமிதம் ஸர்வம்“. அனைத்திலும் ஈசனின் சைதன்யமே நிறைந்துள்ளது என்றே நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே, நம்மைப் பொறுத்தவரை, இயற்கைப் பாதுகாப்பு என்பது இறை ஆராதனையே ஆகும். பாம்பைக்கூட வணங்கும் பண்பாடே நம்மிடம் உள்ளது. அனைத்திலும் இறைவனைக் கண்டு, அனைத்தையும் இறைவனாக வணங்கும்படியே மதம் கூறுகிறது. இந்த உணர்வு இயற்கைமீது அன்பு செலுத்த நமக்குக் கற்பிக்கிறது. […]