நவராத்திரி பாரதம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். “நவராத்திரி” என்று சொல்லும்போதே ஒன்பது இரவுகள் என்பது தெளிவாகிறது. நாம் இப்போது இரவில்தான் வாழ்கிறோம்; அதாவது, அறியாமை இருளில் இருக்கிறோம் . அறியாமை இருளை நீக்கி ஞான ஒளியை உள்ளத்தில் பரவச் செய்வதுதான் நவராத்திரி பூஜையாகும். இவ்வாறு ஒன்பது இரவுகள் முடிந்து பத்தாவது நாளான விஜயதசமி வருகிறது. இங்கே விஜயம் என்பது சாதாரண விஜயம் (வெற்றி) அல்ல. அதாவது மனதின் பலவீனங்கள் மற்றும் எல்லைகளின் சங்கிலியை உடைத்து, பரிபூரண […]