கேள்வி: மனித வாழ்வில் இறை நம்பிக்கையின் அவசியம் என்ன? அம்மா: இறை நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும். ஆனால், வாழ்வின் பாதகமான சூழ்நிலைகளில் மனம் பதறாமல் உறுதியாக முன்னேறிச் செல்ல வேண்டுமெனில், நாம் கடவுளைச் சரண்புகத் தயாராக வேண்டும். அவருடைய பாதையைப் பின்பற்றி வாழத் தயாராக வேண்டும். இறைவனை அடைக்கலம் அடையாத வாழ்க்கை, நீதிபதி இல்லாமல் இரு வழக்கறிஞர்கள் மட்டும் வாதாடுவது போன்றதாகும்.வெறும் வாதம் மட்டும் எந்தவொரு முடிவையும் அளிக்காது.வாதத்திற்குத் தீர்ப்பு எழுத வேண்டுமெனில் நீதிபதி தேவை. […]