கேள்வி: விக்கிரக வழிபாடு என்ற பெயரில் சிலர் இந்துமதத்தை நிந்திக்கிறார்களே! இதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? அம்மா: எந்த நோக்கத்துடன் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் விக்கிரக வழிபாடு எல்லா மதங்களிலும் இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தில் உண்டு ; இஸ்லாம் மதத்தில் உண்டு; புத்த மதத்தில் உண்டு; கிறிஸ்தவ மதத்தில் பாயாஸ நைவேத்தியமும், மலர் அர்ச்சனையும் இல்லை; அவ்வளவுதான். அதற்குப் பதிலாக மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள். ரொட்டியைக் கிறிஸ்துவின் உடலாகவும், திராட்சை மதுவை […]