கொரோனா வைரஸ் பற்றி அம்மாவின்  அறிவுரை அம்மாவின் குழந்தைகள் கொரானா வைரஸ் பற்றிய அச்சத்தில் வாழ்கிறீர்கள் என்பதை அம்மா அறிவேன். அமமா உங்கள் எல்லாரையும் பற்றி நினைக்கிறேன்; உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் எல்லாரும் மிகுந்த எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டிய நேரம் இது. இந்த சவாலை துணிச்சலோடும், சுய கட்டுப்பாடோடும் ஒற்றுமையாகவும் எதிர்கொள்ளவேண்டிய நேரம் இது. நீங்களெல்லாம் அச்சத்துடன் இருக்கிறீர்கள் என்று அம்மாவுக்குத் தெரிகிறதென்றாலும், அச்சம் எவ்விதத்திலும் நமக்கு உதவப் போவதில்லை.  வேண்டியது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மட்டுமே. இப்போது துணிச்சல் தான் அத்தியாவசியம். துணிச்சல் இருந்தால் எதையுமே நாம் வெற்றிகொள்ள முடியும். அதனால் பயத்தை விட்டொழித்து […]