டோக்கியோ ஜூலை 25, 2011 டோக்கியோ நகரில் அம்மாவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது அந்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட  பலர் ஆறுதலையும் அறிவுரையையும் நாடி அம்மாவிடம் வந்திருந்தனர். தாங்கள் அனுபவித்த துயரத்தை அம்மாவிடம் கூறிய போது துக்கம் தாளாமல் வாய்விட்டு அழுதனர். அம்மா அவர்களை அணைத்து ஆறுதல் கூறினார். இவர்களது வேதனையையும்  துயரையும் கவனித்த அம்மா பாதிக்கப்பட்ட பகுதியையும் ஏதாவது ஒரு நிவாரண முகாமையும் பார்வையிடத் தீர்மானித்தார். டோக்கியோ நிகழ்ச்சி அதிகாலை 5மணிக்கு நிறைவுற்றது. அதற்குப் பிறகு அம்மா […]