புதிய குழந்தைகள் காப்பகத் திறப்பு விழா ஏப்ரல் 5, கென்யா கென்யாவில் புதிய குழந்தைகள் காப்பகம் 5-4-2011-ல் திறந்து வைக்கப் பட்டது. கென்யக் குடியரசின் துணைக் குடியரசுத்தலைவர் மேன்மைமிகு கலோஜோ மிஸியோக்கா மேற்கூறிய காப்பகத்தை அம்மாவின் முன்னிலையில் 5-4-2011-ம் நாளன்று திறந்து வைத்தார். இதைக் கென்யாவின் மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை கட்டியுள்ளது. இதையொட்டி ஆதிநதி (Adhi river) என்னுமிடத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அந்நாட்டின் விளையாட்டு மற்றும் கலாசாரத் துறையின் இணையமைச்சர் திருமதி. வவின்ய நிதேதி, பாராளுமன்றத்தின் […]