கேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அம்மா: குழந்தைகளே, அம்மாவுக்கு பாரதம், அமெரிக்கா, ஐரோப்பா என்ற வேறுபாடுகள் எதுவுமில்லை. அங்குள்ளவர்களும் இங்குள்ளவர்களும் அம்மாவின் குழந்தைகளே. அதேசமயம் வெளிநாடுகளுக்கும் பாரதத்திற்கும் இடையில் கலாசார வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு நாட்டின் நிலவளமும் செல்வ நிலையும் மக்களின் மனவளர்ச்சியுமே அங்குள்ள குடிமக்களின் கலாசாரத்திற்கு வடிவம் கொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் வேறுபாடுகள் உண்டு என்றே கூறலாம். […]