கேள்வி: விக்கிரக ஆராதனையின் (உருவ வழிபாடு) தத்துவம் என்ன? அம்மா: உண்மையில் இந்துக்கள் விக்கிரகத்தை (கல்லை) வணங்குவதில்லை. எங்கும் நிறைந்திருக்கும் தெய்விக சைதன்யத்தைத்தான் விக்கிரகத்தின் மூலம் வணங்குகின்றனர். தந்தையின் படத்தைக் காணும் மகன் , அதை வரைந்த ஓவியரை நினைப்பதில்லை; தந்தையையே நினைவு கூர்கிறான்.காதலி அளித்த ஒரு பேனாவையோ, கைக்குட்டையையோ காணும்போது காதலன் தனது காதலியை நினைக்கிறானே அன்றி அந்தப் பொருட்களை நினைப்ப தில்லை. அவன் அதற்குப் பதிலாக வேறு எந்தப் பொருட்க ளைக் கொடுப்பதாகக் கூறினாலும் […]