Author / tamil

இந்த உலகமே என்னவோ தனக்காக மட்டும்தான் என்கிற தவறான கண்ணோட்டத்தில் இத்தனை காலம் உலா வந்துகொண்டிருந்தான் மனிதன். அந்த மனப்பாங்கிலேயே பற்பல நூற்றாண்டுகளாய் மனித இனம் இயற்கையையும், அவளது செல்வங்களையும் அவளது பற்பல பிற ஜீவராசிகளையும் தமது சுயநலத்துக்காகச் சுரண்டி அழித்துக்கொண்டே வந்திருக்கிறது. தான் உட்கார்ந்திருக்கும் மரக்கிளையையே ஒருவன் வெட்டுவதுபோல ஓர் காரியத்தை செய்து வந்திருக்கிறோம் என்று நாம் உணரவே இல்லை. இப்போது பூமியின் நிலப்பரப்பில் சுமார் 30%தான் காடுகள் எஞ்சியிருக்கின்றன. நாம் இதே போக்கில் போய்க்கொண்டிருந்தால் […]

அம்மாவின் செய்தி குழந்தைகளே, நமது பாரத தேசத்தின் கலாசாரத்தின் சின்னமாய் இருப்பது சம்ஸ்கிருத மொழி. மிகத் தொன்மையான நமது பாரதீய கலாசாரத்தின் வாகனமாக விளங்குவது சம்ஸ்கிருத மொழி.  மனித மனத்தில் ஓர் மாற்றத்தை உருவாக்கக் கூடிய ஓர் தனிப்பட்ட சக்தி சம்ஸ்கிருத மொழிக்கும் அதன் ஒலி அதிர்வுகளுக்கும் உண்டு. பாரதத்தில் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எத்தனையோ மொழிகளுக்கு மாதாவாக இருப்பது சம்ஸ்கிருதம். எல்லா பாரத மக்களின் பல்வேறு கலாசாரங்களையும் ஒன்றாய்க் கூட்டி  இணைப்பது சம்ஸ்கிருத மொழியாகும். சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ள […]

கொரானா வைரஸின் தாக்கத்தினால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பல நாட்களாக நாமெல்லாம் நம் வீடுகளுக்குள்ளோ அடுக்ககங்களுக்குள்ளோ அடைபட்டு இருக்கிறோம். உங்களில் பெரும்பான்மையான பேர்களுக்கு இது வெறுத்துப் போயிருக்கும்; துன்பமாயும் கூட இருக்கும். செய்யவேண்டிய காரியங்களுக்காகப் போட்ட திட்டங்கள் எல்லாம் முடங்கிப் போயிருக்கும். ஆனாலும் என் குழந்தைகள் முடிந்தவரை மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருக்க முயலவேண்டும். வைரஸின் பாதிப்பு இந்த அளவிலாவது கட்டுக் கோப்பில் இருக்கிறது என்றால் அதற்கு நீங்களெல்லாம் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்ததே காரணம். இப்போது நமது சிரத்தை […]

உலகம் முழுமையுமே பாதிக்கப்பட்டு வலியில் அழுவதைக் காண்கையில் என் இதயம் வேதனயால் துடிக்கிறது” என்று அம்மா, இன்று மடத்திலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ” இந்நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மன அமைதி பெறவும், உலகம் சாந்தி பெறவும் நாமெல்லாம் இறைவனின் அருள் வேண்டிப் பிரார்த்திப்போம்.” கடந்த சில பத்தாண்டுகளாகவே அம்மா மனிதகுலம் தான் வாழும் வாழ்கக்கை முறைமையை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி வற்புறுத்தி வந்திருக்கிறார். இயற்கையோடு இயைந்த விதத்தில் […]

கோவிட்-19 நோயைக் கட்டுப் படுத்தி, அதன் தாக்கத்தை முறியடிக்கும் முயற்சிகளில் பங்கேற்கும் விதமாகவும், இந்நோயால் உடல், மனம், பொருளாதாரம் இவை பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் வகையிலும் மாதா அமிர்தானந்தமயி மடம் ரூ 13 கோடியை (1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நன்கொடை அளிப்பதாக இன்று அறிவித்துள்ளது. இதில் ரூ. 10 கோடி, பாரதப் பிரதமரின் பி எம் – கேர்ஸ் (PM-CARES) நிதிக்காக்கவும் ரூ. 3 கோடி கேரள அரசின் முதல்வர் அவசரநிலை நிதிக்காகவும் வழங்கப்படுகிற்து. […]

கொரோனா வைரஸ் பற்றி அம்மாவின்  அறிவுரை அம்மாவின் குழந்தைகள் கொரானா வைரஸ் பற்றிய அச்சத்தில் வாழ்கிறீர்கள் என்பதை அம்மா அறிவேன். அமமா உங்கள் எல்லாரையும் பற்றி நினைக்கிறேன்; உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் எல்லாரும் மிகுந்த எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டிய நேரம் இது. இந்த சவாலை துணிச்சலோடும், சுய கட்டுப்பாடோடும் ஒற்றுமையாகவும் எதிர்கொள்ளவேண்டிய நேரம் இது. நீங்களெல்லாம் அச்சத்துடன் இருக்கிறீர்கள் என்று அம்மாவுக்குத் தெரிகிறதென்றாலும், அச்சம் எவ்விதத்திலும் நமக்கு உதவப் போவதில்லை.  வேண்டியது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மட்டுமே. இப்போது துணிச்சல் தான் அத்தியாவசியம். துணிச்சல் இருந்தால் எதையுமே நாம் வெற்றிகொள்ள முடியும். அதனால் பயத்தை விட்டொழித்து […]

சிவராத்திரி என்றவுடன் நாம், அது பகவான் சிவனின் இரவு என்றும், சிவனுக்கு வேண்டிய இரவு என்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் பகவான் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு இரவும் இல்லை பகலும் இல்லை. அவர் உறங்குவதும் இல்லை. எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவ பகவான் ஆகும். சிவராத்திரி, விரதங்கள், விழாக்கள், ஆச்சார அனுஷ்டானங்கள் போன்றவை எல்லாம் நமக்கு வேண்டியேயன்றி, அது கடவுளுக்கு அல்ல. நாம் இதிலிருந்தெல்லாம் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினை என்னவெனில் “நீ உன்னை அறிவாயாக” எனும் செய்தியேயாகும். சிவன் […]

கேள்வி: அம்மா, மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா? அம்மா: ஆன்மிக சிந்தனையாக இருந்தால் சக்தி கிடைக்கும். உறுதியான மனதை நாம் பெறலாம். இறைவன் தியாகம், அன்பு கருணை இவற்றின் உறைவிடமாவார். இறைவனைப்பற்றி நினைக்கும் அளவுக்கு நம்மிடமும் அந்த நல்ல குணங்கள் வளருகின்றன. மனம் விரிவடைகிறது. ஆனால், உலகியல் விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் மனம் உலகப் பொருள்களால் நிறைகிறது. தொடர்ந்து பலப்பல சிந்தனைகள் மனதில் மாறிமாறித் தோன்றுகின்றன. எண்ணங்களுக்கேற்பு பலன்கள் செயல்படுகின்றன. தீய குணங்கள் அதிகரிக்கின்றன. மனம் குறுகியதாகிறது. […]